அமெரிக்கா ஈரான் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதா – பிரித்தானியா கூறுவது என்ன?
அமெரிக்கா ஈரான் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக என்பது குறித்து பிரித்தானிய அரசாங்கத்தால் உறுதிப்படுத்த முடியவில்லையென கூறப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump), போரை முடிவுக்குக் கொண்டுவர தெஹ்ரான் (Tehran) தலைமையுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று கூறியிருந்தார். ஆனால், இதனை ஈரான் மறுத்துள்ளது.
இந்நிலையில் பேச்சுவார்த்தைகள் பற்றி எனக்கு நேரடி தகவல் எதுவும் கிடைக்கவில்லையென கூறிய
கல்விச் செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சன் போர் நிறுத்த, பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும் என்பதே பிரித்தானிய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்தார்.
மோதலை தணிக்கவும், ஈரான் அணு ஆயுதம் உருவாக்காமல் இருப்பதை உறுதிசெய்யவும் பேச்சுவார்த்தைகள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், பேச்சுவார்த்தைகள் உண்மையில் நடைபெறுகின்றனவா என்பது குறித்து அரசாங்கத்திடம் தெளிவான தகவல் இல்லை என்பதும் வெளிப்படையாகியுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.




