எரிபொருள் கப்பலை அனுப்பிய மோடிக்கு அனுர நன்றி
எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து எரிபொருள் கப்பலொன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நன்றித் தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் தளத்தில் இவ்வாறு நன்றி கூறியுள்ளார்.
மத்திய கிழக்கு மோதலினால் இலங்கை எதிர்கொண்டுள்ள எரிபொருள் விநியோகத் தடைகள் குறித்து சில நாட்களுக்கு முன்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடியாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் கொழும்பை வந்தடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த எரிபொருள் கிடைக்க ஒருங்கிணைத்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும் நன்றிகள் என தெரிவித்துள்ளார்.





