எரிபொருள் செலவைக் குறைக்க இலவசப் போக்குவரத்து!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போரினால் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதால், அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மற்றும் தாஸ்மேனியா மாநில அரசுகள் பொது போக்குவரத்தை முற்றிலும் இலவசமாக வழங்க முன்வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
விக்டோரியா மாநில அரசாங்கம் எதிர்வரும் மார்ச் 31 முதல் ஏப்ரல் இறுதி வரை ஒரு மாத காலத்திற்கு அனைத்து ரயில்கள், டிராம்கள் மற்றும் பேருந்துகளை இலவசமாக வழங்குகிறது.
இதன் மூலம் ஒரு சாதாரண பயணி மாதம் சுமார் 220 முதல் 250 டொலர்கள் வரை சேமிக்க முடியும் என மாநில முதல்வர் ஜசிந்தா ஆலன் தெரிவித்துள்ளார்.
தாஸ்மேனியா மாநிலத்தில் பஸ்கள் மற்றும் படகு சேவைகள் மார்ச் 30 முதல் ஜூலை 1 ஆம் திகதி வரை இலவசமாக அமுலில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், டாட்ஜஸ் ஃபெரியிலிருந்து ஹோபார்ட்டிற்கு வேலைக்குச் செல்லும் ஒருவர் வாரத்திற்கு 88 டொலர்கள் வரை சேமிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




