இலங்கை உலகம் செய்தி

சவூதி விமானப்படைதளம்மீது ஈரான் தாக்குதல்: 12 அமெரிக்க படையினர் காயம்!

சவூதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் Prince ⁠Sultan விமானப்படை தளத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் 12 அமெரிக்க படையினர் காயமடைந்துள்ளனர்.

மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் இன்று 29 ஆவது நாளாக தொடர்கின்றது.

ஈரான்மீது அமெரிக்கா, இஸ்ரேல் என்பன கூட்டு இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

ஈரானும் பதிலடி கொடுத்துவருகின்றது. மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க தளங்கள்மீதும் தாக்குதல் நடத்திவருகின்றது.

இந்நிலையிலேயே சவூதியில் மேற்படி தளம் தாக்கப்பட்டுள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த நான்கு வாரங்களாக நீடித்து வரும் இந்த மோதலில், இதுவரை 13 அமெரிக்கப் படையினர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 300 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!