ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் நெருக்கடி: 6 எரிபொருள் கப்பல்களின் பயணம் ரத்து!

ஆஸ்திரேலியாவுக்கு எரிபொருள் ஏற்றி வர வேண்டிய ஆறு எண்ணெய் கப்பல்களின் பயணம் தடைபட்டுள்ளதால் எரிசக்தி விநியோகத்தில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் நிலவும் விநியோக மாற்றங்களால் இந்தத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள போதிலும், அரசாங்கம் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவிடம் தற்போது போதுமான அளவு எரிபொருள் இருப்பு உள்ளதால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று அவர் கேட்டுக்கொண்டார்.

பயணத்தை இரத்து செய்த கப்பல்களுக்குப் பதிலாக மாற்று வழிகளில் எண்ணெயைப் பெறுவதற்கான முயற்சிகளை ஆஸ்திரேலிய அரசு தற்போது மேற்கொண்டு வருகிறது.

எனினும், எதிர்வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இறக்குமதியில் மேலும் சில சவால்கள் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விநியோகச் சங்கிலியில் ஏற்படும் இத்தகைய இடையூறுகளைக் குறைக்க இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடப்பட்டுருகின்றது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேவேளை, ஆஸ்திரேலியாவில் எரிபொருள் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!