உலகம் செய்தி

ஈரானுக்கு 48 மணிநேர காலக்கெடு விதித்த டொனால்ட் ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணையை அடுத்த 48 மணிநேரத்திற்குள் திறந்துவிடாவிட்டால், ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் அழிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ‘Truth Social’ சமூக வலைதளத்தில் எச்சரித்துள்ளார்.

அந்தப் பதிவை இட்ட நேரத்திலிருந்தே இந்த 48 மணிநேரக் காலக்கெடு ஆரம்பமாவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மார்ச் 21 ஆம் திகதி GMT நேரப்படி 23:44 மணிக்கு இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் மார்ச் 23 ஆம் திகதி GMT 23:44 மணி வரை ஈரானுக்கு இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

Mahi

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!