உலகம் செய்தி

ஈரானின் 8,000 இலக்குகள்மீது தாக்குதல்: 130 கப்பல்கள் அழிப்பு!

ஈரானின் நிலத்தடி ஆயுதக் கிடங்குகள் மற்றும் ஏவுகணை கண்காணிப்பு மையங்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் அந்நாட்டின் போர் ஆற்றல் குறைந்துவருகின்றது என அமெரிக்கா கருதுகின்றது.

குறிப்பாக ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் விடுத்து வந்த அச்சுறுத்தல்கள் குறைந்துள்ளது என அமெரிக்க தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஏவுகணை ரேடார் நிலையங்கள் மற்றும் உளவுத்துறை ஆதரவு தளங்களை அழித்ததன் மூலம் ஈரானின் கடற்படை கண்காணிப்புத் திறன் பலவீனமடைந்துள்ளது.

இதுவரை சுமார் 8 ஆயிரம் இலக்குகள் மற்றும் 130 ஈரானியக் கப்பல்கள் அமெரிக்கப் படைகளால் தாக்கப்பட்டுள்ளதாகத் அமெரிக்க தளபதி பிராட் கூப்பர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இத்தகைய இராணுவத் தாக்குதல்கள் தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!