நடன்ஸ் மீது தாக்குதல் – அணு அபாயம் குறித்து IAEA எச்சரிக்கை
நடன்ஸ் அணுசக்தி நிலையம் (Natanz Nuclear Facility) மீது இன்று காலை தாக்குதல் நடந்ததாக ஈரான தெரிவித்ததைத் தொடர்ந்து, சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) கவலை வெளியிட்டுள்ளது.
IAEA வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த தாக்குதல் குறித்து தெஹ்ரான் தகவல் வழங்கியுள்ளது. இருப்பினும், அந்த நிலையத்திற்கு வெளியே கதிர்வீச்சு அளவில் எந்த அதிகரிப்பும் இதுவரை பதிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், அணு விபத்து ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க இராணுவ நடவடிக்கைகளில் மிகுந்த நிதானம் கடைப்பிடிக்க வேண்டும் என்று IAEA வலியுறுத்தியுள்ளது.
இதனை அமைப்பின் பணிப்பாளர் ஜெனரல் ரஃபேல் க்ரோசி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.





