ஐரோப்பா செய்தி

பஹ்ரைன் குறித்து பிரித்தானிய ஆதரவை  பட்டத்து இளவரசரியிடம் விளக்கிய ஸ்டாமர்

பிரித்தானிய பிரதமர் ஸ்டாமர் இன்று காலை பஹ்ரைன் நாட்டின் பட்டத்து இளவரசர் Salman bin Hamad Al Khalifa அவர்களுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த உரையாடலில், வளைகுடா பிராந்தியத்தில் நடைபெற்று வரும் மோதல் நிலைமை குறித்து இருவரும்  கலந்துரையாடியுள்ளனர்.

குறிப்பாக, பஹ்ரைன் (Bahrain) மீது சமீபத்தில் ஈரான் ( Iran) நடத்திய தாக்குதல்கள் குறித்து கவலை வெளியிடப்பட்டது.

பேச்சுவார்த்தையின் போது, ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்ள உதவுவதற்காக நிபுணர்கள் குழுவை அனுப்புவது உள்ளிட்ட, பஹ்ரைனுக்கு இங்கிலாந்து வழங்கி வரும் சமீபத்திய ஆதரவுகளை ஸ்டார்மர் விளக்கினார்.

மேலும், பிராந்திய பாதுகாப்பிற்காக அமெரிக்கா இங்கிலாந்தின் தளங்களை பயன்படுத்துவது குறித்த தகவல்களையும் அவர் பகிர்ந்தார்.

இரு தலைவர்களும் முக்கியமான தேசிய உள்கட்டமைப்பு மற்றும் S ஹார்மோஸ் நீரிணை மீது தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்களை கண்டித்தனர்.

மேலும், ஈரானின் தாக்குதல்களை கண்டித்து பதற்றத்தை குறைக்க அழைப்பு விடுக்கும் இங்கிலாந்து தலைமையிலான கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டதற்காக, பட்டத்து இளவரசருக்கு ஸ்டார்மர் நன்றி தெரிவித்தார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!