வலி. வடக்கில் ஏப்ரலில் காணி விடுவிப்பு?
வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள காணிகளில் சில பகுதிகளை ஏப்ரலில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வில் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவித்தார்.
யாழ். வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று (20) பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது தையிட்டி பகுதியில் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே தவிசாளர் இவ்வாறு தெரிவித்தார்.





