‘துரந்தர்-2’ டிரெய்லர் சாதனை!
‘துரந்தர்’ படத்தின் 2ஆம் பாகம் தொடர்பான முன்னோட்ட காணொளி சமூகவலைத்தளங்களில் வெற்றிநடை போட்டுவருகின்றது.
ரன்வீர் சிங், சாரா அர்ஜுன் நடித்து வெற்றி பெற்ற ‘துரந்தர்’ படத்தின் அடுத்த பாகம் ‘துரந்தர் -ரிவெஞ்ச்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது.
ஆதித்யா தார் இயக்கியுள்ள இப்படம் மார்ச் 19 ஆம்; திகதி இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் மேற்படி படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியானது.
வெளியான வெறும் 48 மணி நேரத்துக்குள் அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் சேர்த்து 312 மில்லியன் பார்வைகளைக் கடந்து இந்த டிரெய்லர் சாதனைப் படைத்துள்ளது.
31.2 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது. அத்துடன், 45-க்கும் மேற்பட்ட நாடுகளில் யூடியூப் ட்ரெண்டிங்கில் இந்த டிரெய்லர் இடம்பிடித்துள்ளது.





