பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் திருகோணமலை பெண்ணுக்கு உயரிய விருது!
திருகோணமலை, மூதூரைச் சேர்ந்த பாத்திமா ஸஜீஹா அமீனுக்கு Fatima Sajeeha Amin பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் (Houses of Parliament) நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவின்போதே அவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
பெண்களின் சமூக மற்றும் அரசியல் மேம்பாட்டிற்காக அவர் ஆற்றி வரும் மகத்தான பணிகளைப் பாராட்டியே இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக LAS அமைப்பு தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மூதூர் (Mutur) பகுதியில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த ஸஜீயாவின் இந்தப் பயணம், பிரிட்டிஷ் ஜனநாயகத்தின் மையப்பகுதியில் அங்கீகாரம் பெற்றுள்ளமை ஒரு வரலாற்றுச் சாதனையாகும்.
அவரது இந்த பயணம் பலருக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளதாகவும் LAS அமைப்பு குறிப்பிட்டுள்ளது.






