இலங்கை செய்தி

கொழும்பிலிருந்து யாழுக்கு போதைப்பொருள் கடத்திய ஆணும், பெண்ணும் கைது!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு போதைப்பொருட்களை கடத்திச்சென்று விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் 630 போதை மாத்திரைகளும் , 5 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் விற்பனையில் ஆண் , பெண் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இருவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரின் உடைமையில் இருந்து போதைப்பொருட்களை மீட்ட நிலையில், அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , கொழும்பில் உள்ள போதைப்பொருள் வியாபாரியிடம் இருந்து போதைப்பொருட்களை வாங்கி வந்து யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை