இலங்கை செய்தி

பள்ளி வாசலுக்குள் வாளுடன் புகுந்த இளைஞனால் யாழில் பரபரப்பு!

யாழிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்றிரவு தொழுகை இடம்பெறும்போது, வாள் முனையில் ஒருவரை துரத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

ஓட்டுமடம் சந்தியில் இருந்து வட்டுக்கோட்டை செல்கின்ற வழியில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை இடம்பெற்றது.

இதன்போது வாளேந்திய நபர் ஒருவர் இன்னொரு இளைஞரை துரத்திக்கொண்டு சென்றவேளை குறித்த இளைஞன் பள்ளிவாசலுக்குள் புகுந்து, அங்குள்ள மதிலில் ஏறி தப்பிச் சென்றுள்ளார்.

இதன்போது வாளுடன் வந்த சந்தேகநபர், பள்ளிவாசலில் இருந்த இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு, வாள் பறிமுதல் செய்யப்பட்டது.

அவ்வேளையில் வாளினை கொண்டுவந்த குறித்த சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!