இலங்கை செய்தி

மே தினக் கூட்டத்தை கைவிடுகிறது மொட்டு கட்சி!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சி இம்முறை மே முதலாம் திகதி மேதினக் கூட்டம், பேரணியை என்பவற்றை நடத்தாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் Sagara Kariyawasam தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“மே முதலாம் திகதி இம்முறை பூரணை தினம் வருகின்றது. எனவே, அன்றைய நாளில் கட்சியால் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படமாட்டாது.

எனினும்,மக்கள் கூட்டம் மற்றும் பேரணி பிரிதொரு நாளில் நிச்சயம் நடத்தப்படும்.

மக்கள் ஆதரவு இல்லை என்பதால் நாம் மே தினக் கூட்டத்தை நடத்தாமல் இருக்கவில்லை. எமக்கு மக்கள் ஆதரவு உள்ளது.

முடிந்தால் மாகாணசைபத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றோம். அப்போது மக்கள் பலம் யாருக்கு என்பது தெரியவரும்.” எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!