உலகம் செய்தி

11 ஆவது நாளாக தொடரும் போர்: வளைகுடா நாடுகளுக்கு ஆஸ்திரேலியா இராணுவ உதவி!

மத்திய கிழக்கு போர் 11 ஆவது நாடாக நீடிக்கும் நிலையில், அப்போர் உலகளவிலும் தாக்கங்களை ஏற்படுத்திவருகின்றது.

ஈரானின் புதிய உச்ச தலைவரையும் கொல்வதற்கு இஸ்ரேல், அமெரிக்கா தீவிரம் காட்டிவரும் நிலையில், மறுபுறத்தில் ஈரானும் தாக்குதல்களை நடத்திவருகின்றது.

இந்நிலையில் ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் Drone தாக்குதல்களிலிருந்து பாரசீக வளைகுடா நாடுகளைப் பாதுகாப்பதற்காக, ஆஸ்திரேலியா Australia இராணுவ உதவிகளை வழங்க முன்வந்துள்ளது.

இதற்கமைய பிரதமர் Anthony Albanese, வான்வெளி கண்காணிப்புப் பணிகளுக்காக E-7A வெட்ஜெடைல் விமானத்தையும் 85 இராணுவ வீரர்களையும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு UAE அனுப்பியுள்ளார்.

இப்பிராந்தியத்தில் வசிக்கும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்று அரசாங்கம் தெரிவிக்கிறது.

மத்திய கிழக்கில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் உள்ளனர்.

எனினும், மேற்படி முடிவிற்கு ஆஸ்திரேலியாவின் எதிர்க்கட்சிகளிடமிருந்து கலவையான விமர்சனங்களும், கிரீன்ஸ் கட்சியிடமிருந்து கடுமையான எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.

ஆஸ்திரேலியா தேவையற்ற முறையில் ஒரு போரில் ஈடுபடுவதாகவும், அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணிந்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!