இந்திய அணிக்கு குவியும் வாழ்த்து: கிடைத்த பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?
ICC T- 20 உலகக் கிண்ணத்தை 3ஆவது முறையாக வென்ற முதல் அணி என்ற சாதனையை படைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள் குவிந்துவருகின்றது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்கள், வீரர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து மழை பொழிந்துவருகின்றனர்.
இந்திய அணி இதற்கு முன்னர் 2007, 2024-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது.மேலும் தொடர்ச்சியாக 2 முறை கோப்பையை வென்ற அணி என்ற சாதனையையும் புரிந்தது.
போட்டியை நடத்திய நாடுகளில் முதல் தடவையாக கோப்பையை வென்ற நாடு எனவும் இந்தியா சாதித்தது.
உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு அந்நாட்டு நாணய மதிப்பில் 21.5 கோடி பரிசாக கிடைத்தது. 2-வது இடத்தை பிடித்த நியூசிலாந்துக்கு ரூ.10.75 கோடி வழங்கப்பட்டது.





