செய்தி

மத்திய கிழக்கில் சிறப்பு தூதுவரை களமிறங்கியது சீனா!

உக்கிர போர் சூழலுக்கு மத்தியில், மத்திய கிழக்குக்கான சீனாவின் சிறப்பு தூதுவர் Zhai Jun, சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

அமைதி முயற்சியை முன்னெடுக்கும் நோக்கிலேயே அவரது விஜயம் அமைந்துள்ளது என தெரியவருகின்றது.

வளைகுடா பிராந்தியத்தில் பாதுகாப்பையும், ஸ்தீரத்தன்மையையும் உறுதிப்படுத்த சவுதியுடன் இணைந்து செயல்பட சீனா தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.

சவுதி வெளிவிவகார அமைச்சர் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் தலைவருடன் நடத்திய ஆலோசனையில், பிராந்தியத்தின் இறைமையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

அப்பாவிப் பொதுமக்கள் மற்றும் இராணுவமற்ற இலக்குகள் மீதான தாக்குதல்களைக் கண்டித்த சீனா, இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

சீனாவின் இந்த நகர்வு, தற்போதைய பதட்டமான சூழலில் ஒரு முக்கியமான சமரச முயற்சியாக பார்க்கப்படுகிறது. இது பிராந்திய அமைதிக்காக சர்வதேச நாடுகளுடன் சீனா கொண்டுள்ள உறவின் வலிமையை வெளிப்படுத்துகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி