இந்திய சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: இன்று விவாதம்!
இந்திய மக்களவை சபாநாயகர் Lok Sabha Speaker ஓம் பிர்லாவுக்கு om Birla எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது இன்று (09) விவாதம் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற பாதீட்டு கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 28 முதல் பெப்ரவரி 13 ஆம் திகதிவரை நடைபெற்றது.
இதன்போது கடந்த பெப்ரவரி 2 ஆம் திகதி மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி Rahul Gandhi உரையாற்றினார்.
முன்னாள் ராணுவத் தளபதி நரவனே Commander Naravane நினைவுக் குறிப்பின் அடிப்படையில் எழுதப்பட்ட புத்தகத்தை மேற்கோள் காட்டி, சீன எல்லைப் பிரச்சினை குறித்துப் பேச முயன்றார். அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டது.
இதில் 118 எம்.பி.க்கள் கையெழுத்திட்டனர். இதில் திரிணமூல் கட்சி எம்.பி.க்கள் கையெழுத்திட வில்லை. இந்நிலையில், தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு அக்கட்சி எம்.பி.க்களுக்கு மம்தா பானர்ஜி Mamata Banerjee உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையிலேயே சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று விவாதத்துக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது.
பிரேரணை வழங்கப்பட்ட நாள் முதல் சபாநாயகர் om Birla, மக்களவையை நடத்தவில்லை. இன்றும் அவர் அவையை வழிநடத்த மாட்டார். அவருக்கு பதிலாக மூத்த எம்.பி. ஒருவர், அவையை நடத்துவார்.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து முதலில் வாக்கெடுப்பு நடத்தப்படும். இதற்கு 50 எம்.பி.க்கள் ஆதரவு அளித்தால் தீர்மானம் மீது விவாதம் நடைபெறும்.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நிறைவடைந்த பிறகு வாக்கெடுப்பு நடத்தப்படும்.
அவையில் இருக்கும் எம்.பி.க்களில் 50 சதவீதம் பேர் ஆதரவு அளித்தால் மட்டுமே தீர்மானம் நிறைவேற்றப்படும். ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு போதிய எம்.பி.க்களின் பலம் இல்லை.
எனவே தீர்மானம் தோல்வி அடையும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.





