இலங்கை செய்தி

அமெரிக்கா அழுத்தம் கொடுத்ததா? இலங்கை கூறுவது என்ன?

“ஈரானிய மாலுமிகளை தெஹ்ரானுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்ததாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை.” என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

“இதுவரை இந்த விடயம் தொடர்பாக எந்த உரையாடலும் இடம்பெறவில்லை.” என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர Major General Aruna Jayasekara. தெரிவித்துள்ளார்.

“ இதுதொடர்பாக அமெரிக்க அரசாங்கத்தின் சார்பாகவோ அல்லது தூதரகத்தின் சார்பாகவோ யாரும் பேசவில்லை.
இலங்கை நிலைமையை கையாளும் போது அதன் சர்வதேச உறவுகளை கவனமாக சமநிலைப்படுத்த வேண்டியிருந்தது.

இலங்கை ஈரானுடன் நீண்டகால உறவுகளைப் பேணுகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனும் நாம் உறவுகளைப் பராமரிக்க வேண்டியுள்ளது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அதேவேளை, ஈரான் கப்பல் விவகாரத்தில் சர்வதேச சட்ட திட்டங்களுக்கமையவே இலங்கை செயல்பட்டுள்ளது எனவும், மனிதாபிமானத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது எனவும் இலங்கை ஏற்கனவே அறிவித்துள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!