இந்தியா செய்தி

தங்கைகளின் திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம் – மகளிருக்கான விஜயின் வாக்குறுதிகள்

தமிழக வெற்றி கழக ஆட்சி அமைந்த உடன் 60 வயதை கடந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 2500 ரூபா வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மகளிர் தின நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே விஜய் மகளிருக்கான வாக்குறுதிகளை அறிவித்தார்.

அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்
எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தங்கைகளின் திருமணத்திற்கும் அண்ணன் சீர் திட்டத்தில் ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டுப் புடவை வழங்கப்படும் என்றும் விஜய் அறிவித்தார்.

“பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் நலனில் அக்கறை செலுத்த தனி இலாகா உருவாக்கப்படும்.

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை இடைநிற்றல் இல்லாமல் கல்வி பயிலும் வகையில் காமராஜர் கல்வி உறுதி திட்டம்.

ஒவ்வொரு மாணவ, மாணவியின் பெற்றோர், பாதுகாவலர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.

வெற்றிப்பயணம் திட்டத்தில் அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம்.

பெண்கள் பாதுகாப்புக்கு மாநிலம் முழுவதும் 500 குழுக்கள் அமைக்கப்படும்.

பொதுப் போக்குவரத்தில் ஸ்மார்ட் panic பட்டன் பொருத்தப்படும்.

அஞ்சலையம்மாள் அதிவிரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

த.வெ.க. ஆட்சி அமைந்த உடன் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு விரைந்து தீர்ப்பு கிடைக்கும் வகையில் புதிய திட்டம்.

விலையில்லா சானிடரி நாப்கின் வழங்கப்படும்.

ரூ.5 லட்சம் வரையிலான வட்டியில்லா நிதி.

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தங்க மோதிரம் வழங்கப்படும்.

எனது அறிவிப்புகள் எல்லாம் ஒரு சாம்பிள் தான், விரைவில் புதிய வாக்குறுதிகள் வெளியாகும்” என்றார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி