இலங்கை செய்தி

போர்ச் சூழல்: உணவு பாதுகாப்பு குறித்து இலங்கையில் விசேட கூட்டம்!

உணவுக் கொள்கை மற்றும் உணவுப் பாதுகாப்புக் குழுவின் விசேட கூட்டம் நேற்று (06) பிற்பகல் நாடாமன்ற வளாகத்தில் அமைச்சர்களான கே.டி. லால்காந்த மற்றும் வசந்த சமரசிங்க ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக, இலங்கையின் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் ஏற்படக்கூடிய தாக்கத்தை முகாமைத்துவம் செய்வது குறித்து ஆராயப்பட்டது.

மக்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கையிருப்பை பேணுவதற்கும், குறிப்பாக வரவிருக்கும் பண்டிகைக் காலத்திற்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதி மற்றும் உணவுப் பொருட்களின் விலை ஏற்ற இறக்கங்கள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

உணவு உற்பத்திக்கும், மீன்பிடித் துறைக்கும் முன்னுரிமை அளித்து, எரிபொருளை தொடர்ந்து வழங்குவதற்கு முறையான பொறிமுறையை உருவாக்குமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்நாட்டின் உணவு உற்பத்திக்குத் தேவையான உரங்கள் மற்றும் விவசாயத்திற்கு அவசியமான இரசாயனப் பொருட்களின் இறக்குமதியின்போது, சம்பந்தப்பட்ட நாடுகள் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தினால், அதனை எவ்வாறு முகாமைத்துவம் செய்வது என்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார ஆகியோருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் அடங்கிய உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் ஏனைய உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!