ஈரான் தூதரகத்தில் குவியும் இலங்கை அரசியல் வாதிகள்!
ஈரானிய உயர் தலைவரின் மறைவையிட்டு, கொழும்பிலுள்ள தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாபப் புத்தகத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினர் கையொப்பமிட்டனர்.
அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த ஈரானிய உயர் தலைவர் மற்றும் ஈரானிய மக்களின் மறைவுக்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் குழுவினர், இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி அலி ரசா டெல்கொஷ்ஷைச் சந்தித்துத் தமது அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது பிராந்திய அமைதி மற்றும் ஈரானுடனான இருதரப்பு உறவுகள் குறித்தும் சுருக்கமாகக் கலந்துரையாடப்பட்டது.
அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அனுதாப குறிப்பேட்டில் பதிவிட்டார். ஏனைய பல அரசியல் பிரமுகர்களும் ஈரான் தூதுரகத்துக்கு சென்றிருந்தனர்.





