ஆஸ்திரேலியாவில் குடியேறுகிறார் நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் Jacinda Ardern
நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் Jacinda Ardern ஆஸ்திரேலியாவில் குடியேற திட்டமிட்டுள்ளார்.
இதற்கமைய மெல்பேர்ன் அல்லது சிட்னியில் அவர் குடியேறுவார் என தெரியவருகின்றது.
சிட்னியில் வீடு தேடி வருவதாகவும், விரைவில் இதற்குரிய நடவடிக்கை இறுதிபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
நியூசிலாந்தில் நிலவும் மிக உயர்ந்த வாழ்க்கைச் செலவு, வீட்டுவசதி தட்டுப்பாடு மற்றும் குறைந்த ஊதியம் போன்ற காரணங்களால் அங்கிருந்து பலர் வெளியேறி வருகின்றனர்.
ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் அதிக வருமானம் மற்றும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குவதால், நியூசிலாந்து தனது திறமையான மனிதவளத்தைத் தக்கவைக்க முடியாமல் போராடி வருகிறது.





