அக்குரேகொட இரட்டைக்கொலை – இரண்டாவது துப்பாக்கிதாரிக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
அக்குரேகொட இரட்டைக்கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டாவது துப்பாக்கிதாரியை மேலதிக விசாரணைக்கு உட்படுத்துவதற்காக 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.
குறித்த நபர் தெற்கு மாகாணம் உட்பட பல பகுதிகளில் பல்வேறு கொலைகளைச் செய்துள்ளதாக பொலிஸாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக இவ்வாறு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .




