புகைப்பட தொகுப்பு

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமண செலவு இத்தனை கோடியா?

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா காதல் திருமணம் உதய்ப்பூரில் நேற்று நடைபெற்றது.

காலையில் தெலுங்கு முறைப்படியும், மாலையில் கொடவா முறைப்படியும் நடந்த திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

திருமண புகைப்படங்களை நேற்று மாலை விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் வெளியிட்டனர்.

புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆனது. திருமண விழாவில் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா ஆடைகள் பெரிதும் பேசப்பட்டு வருகின்றன.

இருவரது தோற்றமும் ராமர்-சீதாவை நினைவுப்படுத்துகிறது. விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா ஆடைகளை பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனாமிகா வடிவமைத்திருந்தார்.

இது ஐதராபாத்தில் உள்ள பாரம்பரிய கோவில்களின் ஆன்மிகத்தை எதிரொலிக்கும் வகையில் அமைந்திருந்தது. மேலும் பழங்கால தங்கத்தை பயன்படுத்தி ஒரு அற்புதமான கலை திறனோடு பக்தி மணத்துடன் ராஷ்மிகா ஆடை வடிவமைக்கப்பட்டிருந்தது.

விஜய் தேவரகொண்டா வேட்டி சிண்டூர் அங்க வஸ்திரத்துடன் கோவில்களின் கலைத்திறனுடன் எம்பிராய்டரி செய்யப்பட்டு புனித கட்டிட கலையின் சின்னங்கள் ஆடையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதுமண ஜோடிகளின் ஆடை அணிகலன்கள் விருந்தினர்கள் மட்டுமல்ல பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

எதிர்வரும் மார்ச் ஆம் திகதி விஜய் தேவரகொண்டாவுக்கும்-ராஷ்மிகாவுக்கும் திருமண வரவேற்பு ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரமாண்ட முறையில் நடைபெற இருக்கிறது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த தம்பதிகளின் திருமணத்துக்கு எவ்வளவு கோடி செலவானது என்பது குறித்து உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், விருந்தினர்களுக்கான அறைகள், உணவுக்கான செலவு, அலங்காரம், ஈவன்ட் மேனேஜ்மென்ட் செலவு உள்ளிட்ட பல செலவுகளை கணக்கிடும்போது, விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமண செலவு ர 2 கோடி ரூபாவுக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால், இதை விட பிரமாண்டமாக மார்ச் 4 ஆம் திகதி திருமண வரவேற்பை நடத்த இருக்கின்றனர்.

இந்திய திரையுலகில் அதிக செலவில் நடத்தப்பட்ட நடிகைகளின் திருமணத்தில் முக்கியமானது அனுஷ்கா ஷர்மாவின் திருமணம் தான். கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா திருமணத்துக்கு 100 ரூபா கோடி செலவானதாம். இத்தாலியில் ஒரு கிராமத்தை வாடகைக்கு எடுத்து பலத்த பாதுகாப்புடன் இவர்களின் திருமணம் நடைபெற்றது.

Sainth

About Author

error: Content is protected !!