இலங்கை செய்தி

அச்சுவேலியில் 9 மாடுகளை கடத்தியவர் கைது!

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரவாணி பகுதியில், சட்டவிரோதமான முறையில் ஒன்பது மாடுகளைக் கடத்திச் சென்ற ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அப்பகுதியில் நீண்டகாலமாக மாடுகள் திருடப்பட்டு வந்த நிலையில், இன்று சிறிய ரக வாகனம் ஒன்றில் ஒன்பது மாடுகளை ஏற்றிக்கொண்டு கடத்திச் சென்றபோது, காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் குற்றத் தடுப்புப் பிரிவினரால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மீட்கப்பட்ட மாடுகளுடன் மேலதிக நடவடிக்கைகளுக்காக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை நாளை மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!