பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக்கோரி கையெழுத்து வேட்டை!
பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) மற்றும் உத்தேச பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைவு( PSTA) என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் பல்கலைக்கழக மூன்றலில் இன்று (27) தபால் கையெழுத்து போராட்டம் இடம்பெற்றது.
வடக்கு, கிழக்கு மக்கள் ஏற்பாட்டில் இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், புதிதாக கொண்டுவரப்படவுள்ள அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் வரைவை கைவிடுமாறும் வலியுறுத்தப்பட்டது.
மக்கள் தமது கையொப்பத்தை இட்டு, அதனை தபால் பெட்டிக்குள் இட்டனர்.
கையெழுத்துகள் திரட்டப்பட்ட பின்னர் அவை நீதி அமைச்சுக்கு அனுப்ப வைக்கப்படும்.






