“புலிகளை தோற்கடிக்க பங்களிப்பு வழங்கியவரே சுரேஷ் சலே”
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆளுங்கட்சி கூறிய பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட வேண்டும். மாறாக அப்பாவியை பலிகடாவாக்கி பிரதான சூத்திரதாரியாக காண்பிப்பதற்கு அரசாங்கம் முற்பட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.”
இவ்வாறு முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில Udaya Gammanpila தெரிவித்தார்.
“புலிகளை தோற்கடிப்பதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய படைவீரர்தான் சுரேஷ் சலே.
எனவே, அவரை பழிவாங்க வேண்டும் என்ற தேவைப்பாடு பிரிவினைவாத சக்திகளுக்கு இருந்தது. சனல் 04 ஊடகத்தை பயன்படுத்தி அவருக்கு எதிராக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.
பிள்ளையான் மற்றும் சுரேஷ் சலே ஆகியோரை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே அரசாங்கம் கைது செய்ய இருந்தது.
எனினும், ரணில் விக்கிரமசிங்க நியமித்த இமாம் குழுவின் அறிக்கையை என்.பி.பி. NPP ஆட்சிகாலத்தில் நான் வெளியிட்டதால் அந்த கைது இடம்பெறவில்லை.” எனவும் உதய கம்மன்பில சுட்டிக்காட்டினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் நான்கு வருடங்களாகின்றன. எனவே, அடுத்த மாதம் இது பற்றி பேசப்படும்.
கடந்த ஏப்ரல் மாதம் பிள்ளையானை கைது செய்தனர். இம்முறை சுரேஸ் சலேவை கைது செய்துள்ளனர்.
ஏப்ரல் மாதமே இக்கைது இடம்பெற்றிருக்கும். எனினும், நிலக்கரி மோசடியை திசை திருப்புவதற்காகவே அது முன்கூட்டியே நடந்துள்ளது.
அரசாங்கம் கூறியதுபோல பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட வேண்டும். மாறாக அப்பாவியை பலிகடாவாக்கி பிரதான சூத்திரதாரியாக காண்பிப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டால் அதற்கு எதிராக நாம் முன்னிலையாவோம்.” – என கம்மன்பில மேலும் குறிப்பிட்டார்.





