அமெரிக்காவின் சமகால போக்கு : அணுசக்தி கோட்பாட்டை புதுப்பிக்கும் முயற்சியில் பிரான்ஸ்!
ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ( Emmanuel Macron) நாட்டின் அணுசக்தி கோட்பாட்டை புதுப்பிக்க முயல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்சும் பிரிட்டனும் அணுசக்தி சக்திகளாக இருந்தாலும், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் எந்தவொரு சாத்தியமான எதிரிகளையும் தடுப்பதற்கு முதன்மையாக அமெரிக்காவையே நம்பியுள்ளன.
இருப்பினும் உக்ரைன் போரில் ரஷ்யாவுடன் ட்ரம்ப் கொண்டுள்ள நல்லிணக்கம் மற்றும் நேட்டோ நட்பு நாடான டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமான கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கான அச்சுறுத்தல்கள் உட்பட பல உலகளாவிய விடயங்கள் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு சூழலை ஆட்டங்கான வைத்துள்ளது.
இந்நிலையில் இந்த மாத தொடக்கத்தில் முனிச்சில் நடத்த மாநாட்டில் பேசிய ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் ( Friedrich Merz) ஐரோப்பிய அணுசக்தித் தடுப்பு குறித்து பிரான்ஸுடன் விவாதங்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாரம்பரியமாக அமெரிக்காவை ஆதரிக்கும் நோர்டிக் நாடுகள் உட்பட பிற நாடுகள் எச்சரிக்கையுடன் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன.
இந்நிலையில் பிரான்ஸ் அணுசக்தி கோட்பாட்டை புதுப்பக்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.





