அமெரிக்காவை உலுக்கிய சக்திவாய்ந்த பனிப்புயல் – இருவர் மரணம்!
அமெரிக்காவை உலுக்கிய சக்திவாய்ந்த பனிப்புயல் காரணமாக மேரிலாந்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிராந்தியம் முழுவதும் பரவலான மின் தடை மற்றும், போக்குவரத்து தடையை ஏற்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேரிலாந்தின் கால்வர்ட் கவுண்டியில் (Calvert County), வாகனம் ஒன்றின்மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் இருவர் உயிரழந்துள்ளதாக ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதேபோல் புயலின் போது மேரிலாந்தின் சில பகுதிகளில் 16 அங்குலம் (40 செ.மீ) பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.
மேலும் ரோட் தீவு மற்றும் மாசசூசெட்ஸின் (Massachusetts) சில பகுதிகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





