இந்தியாவின் அரையிறுதி கனவு கலையும் சாத்தியம்!
T-20 உலகக்கிண்ண தொடர்பில் சூப்பர் 8 சுற்றில் தென்னாபிரிக்கா அணியிடம் தோல்வி அடைந்த இந்திய அணி Indian team அரையிறுதி சுற்றுக்கு semi finals முன்னேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரையிறுதிக்குரிய வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டுமெனில் சிம்பாப்வே Zimbabwe அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அமோக வெற்றியை பெற வேண்டும்.
இந்திய அணிஇ சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் தென்னாபிரிக்கா அணியிடம் 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதனால் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்புகள் பெருமளவு குறைந்துள்ளன.
குழு 1இல் இந்திய அணியின் நெட் ரன் ரேட் -3.800 என சரிந்துள்ளது. குறித்த பிரிவில் இடம்பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி + 5.350 மற்றும் தென்னாபிரிக்கா +3.800 புள்ளிகளுடன் முதல் இரு இடங்களை பிடித்துள்ளன.
இந்த பிரிவில் நெட் ரன் ரேட்டை பார்க்கும் போது, வெறும் வெற்றிகளால் மட்டுமே இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற முடியாது என்பது தெளிவாகின்றது.
எனவே, இந்திய அணி தனது அடுத்த போட்டியில் சிம்பாப்வே அணியை 100 ஓட்டங்கள் அல்லது அதற்கு அதிக வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும்.
இப்படி செய்தால் மட்டுமே இந்திய அணியின் நெட் ரன் ரேட் அதிகரிக்கும்.
இந்திய சம்பாப்வே அணிகள் மோதும் போட்டி நாளை சென்னையில் நடைபெறவுள்ளது.
இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 220 ஓட்டங்களைக் குவிக்க வேண்டும். பிறகு இரண்டாவது இன்னிங்ஸில் சிம்பாப்வே அணியை 120 அல்லது அதற்கும் குறைந்த ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தி வெற்றி பெற வேண்டும்.
குறைந்தபட்சம் 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரின் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெற முடியும்.





