பிரேசிலில் கடும் மழை – 14 பேர் உயிரிழப்பு!
தென்கிழக்கு பிரேசிலிய நகரமான ஜூயிஸ் டி ஃபோராவில் (Juiz de Fora) பெய்த கனமழை காரணமாக குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 440 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நகராட்சி பாடசாலைகளில் வகுப்புகள் இடைநிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போது நிலவும் சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு, பொது பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் பிரேசில் சீரற்ற வானிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





