கேரள மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
“கேரள” மாநிலத்தின் பெயரை “கேரளம்” என்று மாற்றுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று இதனை அறிவித்தார்.
கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என்று மாற்றுவதற்கான தீர்மானம் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் 24 அன்று, அவ் மாநில சட்டமன்றம் ஒருமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.
இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்த முதலமைச்சர் பினராயி விஜயன் (Pinarayi Vijayan), மலையாளத்தில் இந்த மாநிலம் ‘கேரளம்’ என்று அழைக்கப்படுவதாகவும், மலையாள மொழி பேசும் சமூகங்களுக்காக ஒன்றுபட்ட கேரளாவை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை தேசிய சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே வலுவாக எழுந்துள்ளதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவிருக்கும் கேரள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





