பிரதமர் மோடி நாளை இஸ்ரேல் பயணம்: காங்கிரஸ் எதிர்ப்பு!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் Prime Minister Narendra Mod இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் கட்சி Congress கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் வெளியேற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் இந்த செயலுக்கு உலகளவில் கண்டம் எழுந்துள்ளது.
மேலும், இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளன எனக் கூறப்படுகின்றது.
அதுமட்டுமின்றி இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் மோடியின் உரையை புறக்கணிப்பதாக இஸ்ரேலில் உள்ள எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
இந்திய பிரதமர் நாளை இஸ்ரேல் செல்கின்றார். அந்நாட்டு பிரதமர் உள்ளிட்ட முக்கிய தரப்புகளை சந்திக்கவுள்ளார்.
இந்நிலையிலேயே பாலஸ்தீனத்தை பிரதமர் மோடி மறந்து செயல்படுகின்றார் என்ற குற்றச்சாட்டு காங்கிரஸ் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.





