தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – நீக்கப்பட்ட பெயர்களின் எண்ணிக்கை 74 இலட்சமாக உயர்வு
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களின் எண்ணிக்கை 74 இலட்சமாக உயர்வடைந்துள்ளது.
தகுதியுள்ள வாக்காளர்களைக் கொண்ட 2026 ஆம் ஆண்டின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளதாக, அம்மாநில தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில் தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 6.41 கோடியாக காணப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி, 18 முதல் 19 வயதுக்குட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 12.51 லட்சம் என்றும் மாற்றுத் திறனாளிகள் எனக் குறிக்கப்பட்ட வாக்காளர்கள் 4.63 லட்சம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வாக்காளர்கள் 3.99 லட்சம் என்றும் இந்திய தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.





