மலேசியாவை தொடர்ந்து இந்தோனேசியாவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!
இந்தோனேசியாவின் கலிமந்தன் (Kalimantan ) பகுதியில் 07.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் 633 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நிலநடுக்கத்தினால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.





