அணுசக்தி செறிவூட்டல் : அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு தயாராகும் அமெரிக்கா, ஈரான்!
அமெரிக்காவும் ஈரானும் வரும் வியாழக்கிழமை அணுசக்தி குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகள் ஜெனீவாவில் நடைபெறவுள்ளதாக ஓமானின் வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்-புசைடி (Badr al-Busaidi) உறுதிப்படுத்தினார்.
ஈரானின் உயர்மட்ட இராஜதந்திரி அப்பாஸ் அரக்சி, ஒரு இராஜதந்திர தீர்மானத்திற்கு நம்பிக்கை தெரிவித்ததாகவும், ஒரு வரைவு திட்டம் சில நாட்களுக்குள் தயார் செய்யப்படும் எனக் கூறியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் தனது இராணுவ இருப்பை கணிசமாக அதிகரித்துள்ள அமெரிக்க நிர்வாகம், அணுசக்தி பேச்சுவார்த்தைகள் தொடர்பில் ஒப்பந்தத்தை எட்டாவிட்டால் தாக்குதல் நடத்த பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளது.
அத்துடன் துருப்புகள் ட்ரம்பின் உத்தரவுக்கு காத்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த சுற்று பேச்சுவாார்த்தைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




