மலேசியாவை அதிகாலை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
மலேசியாவின் சபா ( Sabah) மாநிலத்தில் உள்ள போர்னியா (Borneo) தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கமானது 7.1 ரிக்டர் அளவில் பதிவானதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கடலோர மாநில தலைநகர் கோட்டா கினாபாலுவிலிருந்து ( Kota Kinabalu) வடகிழக்கே 100 கி.மீ.க்கும் குறைவான ஆழத்தில் மேற்படி நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
உயிரிழப்புகள் அல்லது சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் எந்த எச்சரிக்கையையும் வெளியிடப்படவில்லை.





