பிரித்தானியாவில் 40% மக்கள் AI வழிகாட்டுதலையே நம்புகின்றனர் – நிபுணர்கள் எச்சரிக்கை
பிரித்தானியாவில் 40 வீத மக்கள் நிதி ஆலோசனைகளுக்காக ChatGPT, Gemini மற்றும் Co-Pilot போன்ற AI செயற்கை நுண்ணறிவு தளங்கள் பயன்படுத்துவதாக ஆய்வு தெரிவிக்கிறது.
மனித நிதி ஆலோசகர்கள் அதிக செலவானதால், பலர் கட்டுப்பாடற்ற AI வழிகாட்டுதலுக்கு மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
AI வழங்கும் தகவல்கள் தவறானவையாகவோ அல்லது நுகர்வோருக்கு பொருந்தாமலோ இருக்கலாம் என
முதலீடு மற்றும் சேமிப்பு கூட்டணியின் கொள்கைத் தலைவர் சோஃபி லெக்ராண்ட்-கிரீன் (Sophie Legrand-Green),
எச்சரித்துள்ளார்.
கணக்கெடுப்பின் படி, 18 முதல் 28 வயதுக்கு இடைப்பட்டோரில் 65 வீதமானோரும்,
29 வயது முதல் 44 வயதுக்கு இடைப்பட்டோரில்61 வீதமானோர் கடந்த ஆண்டு தனிப்பட்ட நிதி உதவிக்காக AI பயன்படுத்தியுள்ளனர்.
இதனிடையே குறைந்த சொத்துக்கள் கொண்ட வாடிக்கையாளர்களை ஏற்கும் மனித ஆலோசகர்கள் கணிசமாக குறைந்துள்ளதாகவும் தரவு காட்டுகிறது.





