இலங்கை செய்தி

ரணிலின் மனைவியிடமும் விசாரணை வேட்டை: 20 ஆம் திகதி அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் Ranil Wickremesinghe பாரியார் மைத்திரி விக்கிரமசிங்கவிடம் Maithri Wickremesinghe குற்றப் புலனாய்வு பிரிவினர் CID வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளனர்.

இதற்கமைய எதிர்வரும் 20 ஆம் திகதி முன்னிலையாகுமாறு அவருக்கு கொள்ளுபிட்டிய பொலிஸார் ஊடாக அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு பிரிவின் நிதிய குற்ற விசாரணைப் பிரிவுக்கே அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது.

தனது தனிப்பட்ட பயணத்துக்கு அரச நிதியை பயன்படுத்தினார் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக மைத்திரி விக்கிரமசிங்க அழைக்கப்பட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!