பிரதமருடன் சுவிஸ் தூதுவர் சந்திப்பு!
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி Siri Walt , பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை Harini Amarasooriya சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
அலரிமாளிகையில் Temple Trees நேற்று மேற்படி சந்திப்பு இடம்பெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது என பிரதமர் தனது அதிகாரப்பூர்வ சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் சுவிட்சர்லாந்தின் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி முறைகள் தொடர்பிலான வாய்ப்புகள் மற்றும் அறிவைப் பரிமாறிக்கொள்வது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.





