அறிவியல் & தொழில்நுட்பம்

முதியோர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பிரத்தியேக காலணி!

பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியாளரான டாக்டர் ஜியாங் லி (Jiayang Li), வயதானவர்கள் தங்கள் சமநிலையைப் பராமரிக்கவும், விழுவதைத் தடுக்கவும் உதவும் வகையில் புதிய காலணி ஒன்றை உருவாக்கியுள்ளார்.

தனது 89 வயதான வழிகாட்டியான பீட்டர் லாங்லோயிஸ் (Peter Langlois) சரியாக நிற்கமுடியாமல் சிரமப்படுவதை அவதானித்ததன் மூலம் இதனை கண்டுப்பிடித்ததாக கூறுகிறார்.

இது வீழ்ச்சி அபாயங்களை நிவர்த்தி செய்ய உதவுவதாகவும், 253 சிறிய சென்சார்கள் மற்றும் மேம்பட்ட மைக்ரோசிப் பொருத்தப்பட்ட ஒரு இன்சோல் (insole) உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

குறைந்த மின்னழுத்த பேட்டரியால் இயக்கப்படும் இந்த சாதனம், ஒரே சார்ஜில் தோராயமாக மூன்று மாதங்கள் வரை இயங்கும் என்றும்  மொபைல் போன்கள் அல்லது டேப்லெட்களில் விரிவான நடை பகுப்பாய்வை மேற்கொள்ளும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தொழில்நுட்பம் மின் மற்றும் மின்னணு பொறியாளர்கள் நிறுவனத்தின் மாநாட்டில் காட்சிப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்
error: Content is protected !!