ட்ரம்பின் காசா அமைதி வாரியத்தில் சேர வத்திக்கான் மறுப்பு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் “அமைதி வாரியம்” என்ற முன்முயற்சியில் வத்திக்கான் பங்கேற்காது என்று வத்திக்கானின் உயர்மட்ட இராஜதந்திர அதிகாரி கார்டினல் பியட்ரோ பரோலின் ( Pietro Parolin) தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் நெருக்கடி சூழ்நிலைகளைக் கையாள்வதற்கான முயற்சிகளை ஐக்கிய நாடுகள் சபை நிர்வகிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமைதி வாரியத்தில் சேர போப் லியோவிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அதனை நிராகரித்து கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதேவேளை ஒரு வெளிநாட்டு பிரதேசத்தின் விவகாரங்களை மேற்பார்வையிட ட்ரம்ப் ஒரு வாரியத்தை மேற்பார்வையிடுவது ஒரு காலனித்துவ கட்டமைப்பை ஒத்திருக்கிறது என்று நிபுணர்கள் பலர் சாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





