கிறிஸ்டி நோயெம் மற்றும் கடலோர காவல்படைக்கு இடையிலான உறவில் விரிசல்!
இங்கிலாந்தின் உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயெம் ( Kristi Noem) மற்ற கடமைகளை விட நாடுகடத்தலுக்கு முன்னுரிமை அளித்தமையால் அமெரிக்க கடலோர காவல்படை தலைமைக்கும் அவருக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடலோர காவல்படையின் C-130 விமானத்தை புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த பயன்படுத்துவதற்கு கிறிஸ்டி நோயெம் ( Kristi Noem) உத்தரவிட்டதை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ளன.
நோயெமின் வழிகாட்டுதலின் கீழ், கடலோர காவல்படை விமானங்கள் இப்போது முந்தைய விகிதத்தை விட பத்து மடங்கு அதிகமாக புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த நிலைமை கடலோர காவல்படைக்குள் ஒரு எச்சரிக்கையான சூழலை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல தலைவர்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




