நேபாளம் அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட வெற்றியிலக்கு
நேபாளம் அணி 171 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடவுள்ளது.
உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய (17) மூன்றாவது போட்டியில் ஸ்கொட்லாந்து மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் மோதி வருகின்றன.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நேபாளம் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
ஸ்கொட்லாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் மிட்செல் ஜோன்ஸ் 71 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.




