குறுகிய காலத்தில் ரஷ்யாவின் 09 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை தாக்கிய உக்ரைன்!
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ரஷ்யாவின் 09 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை உக்ரைன் தாக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கியேவின் ட்ரோன் படைகளின் தளபதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ரஷ்யாவில் உள்ள 240 இடங்கள் மற்றும் ரஷ்ய ஆக்கிரமிப்பு பிரதேசங்களில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் துருப்புக்களால் தாக்கப்பட்டதாக ரோபர்ட் ப்ரோவ்டி (Robert Brovdi) குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் கிராஸ்னடோர் பகுதியில் உள்ள இல்ஸ்கி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நேற்று இரவு முழுவதும் தாக்கியதாகவும், இதனால் தீ விபத்து ஏற்பட்டதாகவும் உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
அதேபோல் தாமான் கருங்கடல் துறைமுகத்தின் தளமான வோல்னா (Volna) கிராமத்தில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் தாக்கி அழிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.




