இலங்கை செய்தி

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் – கடும் வாகன நெரிசல்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களால் இன்று (17) எதிர்ப்பு பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில்
பல்கலைக்கழகத்திற்கு அருகில் சில மணிநேரம் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தன்னிச்சையான முறையில் பல்கலைக்கழக மாணவர்களை
ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக, கொழும்பு பல்கலைக்கழக மாணவர் பேரவையின் தலைவர் ஹிமிசர தெனுவன் கூறியுள்ளார்.

பல்கலைக்கழகங்களுக்குள் மாணவர்கள் ஏதேனும் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்வதாயின், அதனை பல்கலைக்கழக நிர்வாகம் ஒழுங்குபடுத்த வேண்டும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நிபந்தனை விதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு மாணவர்கள் உடன்படவில்லை என்றும், இந்தச் செயற்பாடு தொடர்ந்து முன்னெடுக்கப்படுமானால் அதற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளிலும் பல சிக்கல்கள் காணப்படுவதாக ஹிமிசர தெனுவன் மேலும் தெரிவித்தார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!