இலங்கையின் மீட்சிக்கு சர்வதேச அங்கீகாரம் – IMF முகாமைத்துவப் பணிப்பாளர் பாராட்டு
அரசாங்கத்தின் சீர்திருத்த வேலைத்திட்டம் நாட்டிற்கும் மக்களுக்கும் நற்பலன்களை அளித்து வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் அவருக்கும் இடையே இன்று (17) சந்திப்பு இடம்பெற்தையடுத்து. கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தமது எக்ஸ் கணக்கில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
“இலங்கை வெகுதூரம் கடந்து வந்துள்ளது. அரசாங்கத்தின் சீர்திருத்த வேலைத்திட்டம் நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் நற்பலன்களை அளித்து வருகிறது.
அனைவருக்கும் சுபீட்சத்தை வழங்கும் வலுவான மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதிசெய்யும் வகையில், சீர்திருத்தங்களைத் தொடர்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.





