ஐரோப்பா

இங்கிலாந்தில் அதிகரித்து வரும் வேலையற்றோர் வீதம் – சிக்கலில் உள்ள துறைகள்!

இங்கிலாந்தில் வேலையின்மை வீதம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்பாக சில்லறை விற்பனை மற்றும் விருந்தோம்பல் துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புள்ளிவிபரங்களுக்கு அமைய டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களில் வேலையின்மை விகிதம் 5.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கொவிட் காலப்பகுதியோடு ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் வேலை தேட உதவும் வகையில் அரசாங்கம் ‘செயலில் உள்ள நடவடிக்கைகளை’ செயல்படுத்தி வருவதாக  அமைச்சர் ஒருவர் கூறினார். கடந்த ஆண்டில் தோராயமாக 440,000 புதிய வேலைகள் உருவாக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!